ஜேர்மனியில் மீண்டும் ட்ரோன்களால் விமான சேவை பாதிப்பு
ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் மீண்டும் ட்ரோன்களால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
மீண்டும் ட்ரோன்களால் விமான சேவை பாதிப்பு
ஜேர்மனியின் Hanover விமான நிலையத்தின் மீது மர்ம ட்ரோன்கள் பறந்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு மணி 9.47 முதல் சனிக்கிழமை அதிகாலை மணி 12.16 வரை விமான நிலையம் மூடப்பட்டது.

ஐந்து ட்ரோன்கள் விமான நிலையம் மீது பறந்ததாகவும், அதைத் தொடர்ந்து சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாகவும், சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் விமான நிலைய செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக ஜேர்மனியில் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் விமான நிலையங்களிலும் மர்ம ட்ரோன்கள் பறப்பது தெரியவந்ததால் விமான சேவை அவ்வப்போது பாதிப்புக்குள்ளாகிவருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |