கார்களுக்கு பதிலாக ட்ரோன் தயாரிப்பில் இறங்கியுள்ள ஜேர்மனி
ஜேர்மனியில் கார் உற்பத்தி தொய்வடைந்துள்ள நிலையில், புதிய ஒரு தொழில் பரபரப்பாக எழுச்சி கண்டுவருகிறது.
கார்களுக்கு பதிலாக ட்ரோன்கள்
ஆம், ஜேர்மனி முழுவதும் கார்களுக்கு பதிலாக ட்ரோன்கள் தயாரிக்கும் தொழில் மும்முரமடையத் துவங்கியுள்ளது. பொறியாளர்கள் கார்களுக்கு பதிலாக ட்ரோன்கள் தயாரிக்கத் துவங்கியுள்ளார்கள்.
குறிப்பாக, Falke என்னும் பொதுமக்களுக்கும் ராணுவத்துக்கும் உதவியாக இருக்கும் அதிவேக மற்றும், அதிக தூரம் பயணிக்கும் ட்ரோன்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன.
மியூனிக் நகருக்கு அருகே, ட்ரோன் தயாரிப்பவர்கள், ஏற்கனவே கார்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிலில் இருப்பவர்களுடன் இணைந்து, கார் தயாரிப்பில் தங்களுக்கு இருக்கும் அனுபவத்தைப் பயன்படுத்தி ராணுவத்துக்கு பயன்படும் ட்ரோன்களைத் தயாரிக்கத் துவங்கியுள்ளார்கள்.
உக்ரைன் போர் இந்த புதிய தொழிலுக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது எனலாம். கார்கள் தயாரித்துவந்த பொறியாளர்களும் தொழில் முனைவோரும், தற்போது ராணுவ வீரர்களைப் போல சிந்திக்கத்துவங்கி, போரில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களையும் தயாரிக்கத் துவங்கியுள்ளார்கள்.
ஜேர்மனி தனது பாதுகாப்புக்காக ஒதுக்கிய 500 பில்லியன் யூரோக்கள், தற்போது நாடு முழுவதும் தொழில் முனைவோருக்கு ட்ரோன் தயாரிப்பாளர்களுக்கு உதவ முன்வர, இதுவரை ராணுவ தளவாடங்களைத் தயாரிக்கத் தயங்கிய நிறுவனங்களும் இப்போது ட்ரோன் தயாரிப்பு முதலான வேலைகளில் இறங்கியுள்ளன.
ஆக, கார் உற்பத்திக்கு பெயர் பெற்ற ஜேர்மனியில், இப்போது தயாரிக்கப்படும் ட்ரோன்கள் ராணுவம் முதலான அமைப்புகளுக்கு உதவ, தொழில் தொய்ந்துபோனதால் கவலையில் இருந்தவர்களுக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக, ஒரு புதிய தொழில் புரட்சியே உருவாகியுள்ளது எனலாம்.