கல்லூரி படிப்பை இடைநிறுத்தி 22 வயதில் பில்லியனரான இந்தியர்
சமீபத்தில் M3M hurun நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது.
கைவல்யா வோஹ்ரா
இதில் பெங்களூருவை சேர்ந்த 22 வயதான கைவல்யா வோஹ்ரா (Kaivalya Vohra), இந்தியாவின் இள வயது பில்லியனர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்ட்போர்ட் பல்கல்கலைக்கழகத்தில், கணினி அறிவியில் பிரிவில் சேர்ந்த அவர், படிப்பை இடைநிறுத்தி விட்டு, அவரது நண்பர் ஆதித் பாலிச்சாவுடன்(Aadit Palicha) இணைந்து Zepto என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
2020 ஆம் ஆண்டில் Kiranakart என்ற பெயரில் தங்களது 17 வயதில், 45 நிமிடங்களில் டெலிவரி செய்யும் Quick Commerce நிறுவனத்தை தொடங்கினர்.
அதன் பிறகு, 2021 ஆம் ஆண்டில் அதற்கு Zepto என பெயர் மாற்றம் செய்தனர்.
குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்த இந்த நிறுவனம், 2024 ஆம் ஆண்டில் 5 பில்லியன் டொலர் என்ற மதிப்பை எட்டியது.
கைவல்யா வோஹ்ரா, 4480 கோடி சொத்து மதிப்புடன், இந்தியாவின் இளவயது பில்லியனர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
23 வயதான ஆதித் பாலிச்சா ரூ.5380 கோடி சொத்துமதிப்புடன் இந்தியாவின் இளவயது பில்லியனர் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |