22 வயதில் டீ, சமோசா விற்று கோடிகளில் சம்பாதிக்கும் இளைஞர்
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு டீ, சமோசா விற்று கோடிகளை சம்பாதித்து வருகிரார்.
கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு
அவுஸ்திரேலியாவின் பிரபலமான கல்லூரி ஒன்றில் BBA பட்டம் பெறும் பொருட்டு இணைந்துள்ளார் ஆந்திராவின் நெல்லூர் பகுதியை சேர்ந்த சஞ்சித் கோண்டா.
ஆனால் டீ விற்பனையில் களமிறங்க முடிவு செய்த சஞ்சித் கோண்டா, கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு தனது முதல் தொழில் முயற்சியை முன்னெடுக்க முடிவு செய்துள்ளார்.
coffee பிரியர்களின் நகரமான மெல்போர்னில் டீ மற்றும் சமோசா விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார் சஞ்சித் கோண்டா. 22 வயதேயான சஞ்சித் கோண்டா தமது மூன்று நண்பர்களுடன் இணைந்து 25,000 அவுஸ்திரேலிய டொலர் முதலீட்டில் முதல் கடையை திறந்துள்ளனர்.
சுமார் ரூ.5.3 கோடி வருவாய்
துவக்கத்தில் 5 வகையான டீயை தங்கள் கடையில் அறிமுகம் செய்துள்ளனர். இந்த நிலையில், மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களில் இந்த டீ தகவல் தீயாக பரவ, விற்பனை சூடுபிடித்துள்ளது.
முதல் ஆண்டிலேயே சுமார் ரூ.5.3 கோடி வருவாய் ஈட்டியுள்ளது இவர்களின் டீ மற்றும் சமோசா விற்பனை. மட்டுமின்றி 20 சதவீதம் அளவுக்கு முதல் ஆண்டில் ஆதாயம் பார்த்துள்ளனர்.
இந்தியாவில் இருந்தே தமக்கு தேவையான தேயிலையை இறக்குமதி செய்து வருகிறார் சஞ்சித் கோண்டா. தற்போது மெல்போர்ன் நகரின் இன்னொரு பகுதியிலும் தங்களின் இரண்டாவது கடையை திறக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறார் சஞ்சித் கோண்டா.
அத்துடன், பகுதி நேர வேலை செய்யும் இந்திய மாணவர்களை தமது கடையில் வேலைக்கு சேர்த்துக் கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |