இந்திய அணியிலிருந்து இந்த மூத்த வீரரை நீக்க போறீங்களா? ஆதரவாக களமிறங்கிய முன்னாள் வீரர்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் தவானை தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.
இந்திய உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் தவான் தொடர்ந்து மோசமாக விளையாடினார். அதேசமயம், இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சதங்களை விளாசி பட்டையை கிளப்பினார்.
இதனால், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் தவானுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலைியல், தென் ஆப்பிரிக்கவுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து தவானை நீக்குவது முற்றிலும் நியாயமற்றது என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
தனது யூடியூப் சேனில் பேசிய ஆகாஷ் சோப்ரா, விஜய் ஹசாரே கோப்பையில் தவான் கடைசி ஐந்து போட்டிகளில் 12, 8, 14,12 மற்றும் 0 ரன்கள் எடுத்துள்ளார். அவரை தேர்வு செய்ய வேண்டுமா என கேள்வி எழலாம், கண்டிப்பாக அவரை தேர்வு செய்ய வேண்டும்.
தவான் இந்திய அணியில் தனது திறமையை நிரூபித்த வீரர். ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக விளையாடியவர். அவர் Mr ICC.
2021-ல் இந்திய அதிகபடியான ஒரு நாள் போட்டிகளில் விளையாடவில்லை, எனவே அவரை ஏன் நீக்க வேண்டும்? டி20 உலகக் கோப்பை போட்டிக்கு அவரை தேர்வு செய்திருக்க வேண்டும் என பலர் குறிப்பிட்டனர்.
ருதுராஜ் கெய்க்வாட் அதிக ரன்கள் அடிப்பதால், அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஓபனிங் விளையாடலாம், அல்லது ரோகித்-ராகுல் ஜோடி செட் ஆகிவிட்டது என்பதற்காகலாம் தவானை அணியிலிருந்து நீக்குவது முற்றிலும் நியாயமற்றது.
அணி நிர்வாகம், தவானை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக இளம் வீரரரை தேர்வு செய்ய நினைத்தால், அந்த காரணத்தையே தவானிடம் தெரிவிக்க வேண்டும்.
அவர் மோசமாக விளையாடினால் அணியிலிருந்து நீக்கலாம். ஆனால், நன்றாக விளையாடும் வீரை ஏன் நீக்க வேண்டும்.
தவான் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன்.
அப்படி இந்தியா அவரை நீக்க முடிவெடுத்தால் இதுகுறித்து அவரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.