வறட்சியால் பிரான்சில் சீஸ் உற்பத்தி பாதிப்பு
பிரான்சில் நிலவிவரும் வறட்சி காரணமாக சீஸ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கடுமையான வெப்பம் நிலவிவருகிறது. அதன் காரணமாக வறட்சி உருவாகியுள்ளது.
அதனால் நாட்டில் சுமார் 70 சதவிகித பகுதிகளில் தண்ணீர் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வறட்சியால் சீஸ் உற்பத்தி பாதிப்பு
தண்ணீர் கட்டுப்பாடுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள விடயம் விவசாயம் ஆகும்.

அதிக வெப்பம் காரணமாக புல் உலர்ந்துபோனதால் கால்நடைகளுக்கு சரியான உணவு இல்லை.
கால்நடைகளுக்கு புல் இல்லாததால், பால் உற்பத்தியும், தரமும் குறைந்துள்ளன.
ஆக, பால் உற்பத்தி குறைந்துள்ளதுடன் பாலின் தரமும் தேவையான அளவில் இல்லாததால், அதாவது பாலில் தேவையான அளவு கொழுப்பு இல்லாததால், பாலிலிருந்து தயாரிக்கப்படும் சீஸ் என்னும் பாலாடைக்கட்டியின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |