தீவிர வெப்பம்... பிரித்தானியாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட வறட்சி
வரலாறு காணாத குறைந்த மழைப்பொழிவு மற்றும் அசாதாரணமான அதிக வெப்பநிலை காரணமாக, பிரித்தானியாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மிகவும் வறண்ட ஜூலை
அரசின் சுற்றுச்சூழல் முகமையின் தகவலின்படி, நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட மழையளவில் வெறும் ஏழு சதவிகிதமும், தெற்கு பிரித்தானியாவின் சில பகுதிகளில் ஒரு சதவிகிதமும் மட்டுமே பெய்துள்ள நிலையில், இதுவரையிலான ஜூலை மாதங்களிலேயே மிகவும் வறண்டதாக இது பதிவாகியுள்ளது.

மட்டுமின்றி, இந்த ஆண்டின் நான்காவது வெப்ப அலையை நாடு எதிர்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைவான மழைப்பொழிவு மற்றும் அதிக வெப்பம் உள்ளிட்டவையால் ஏற்படும் வறட்சியானது, பிரித்தானியாவைப் பொறுத்தமட்டில் இது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகும்.
சுற்றுச்சூழல் முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது, விவசாயிகள் பயிர்களை முன்கூட்டியே அறுவடை செய்ய வேண்டியுள்ளது, காட்டுத்தீ அபாயம் அதிகரித்து வருகிறது, மேலும் மில்லியன் கணக்கான மக்கள் நீர் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்ந்து வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் நிறுவனங்களுக்கு
வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்ட ஏழு இடங்களில் லண்டன், அதன் வடகிழக்கில் உள்ள ஈஸ்ட் ஆங்லியா, தென்மேற்கு பிரித்தானியா முழுமையும் மற்றும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் ஆகியவை அடங்கும்.
இவை நாட்டின் 51.4 சதவீதப் பரப்பளவைக் கொண்டுள்ளன. இந்த நிலையில், பிரித்தானியா முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகள், தயார்நிலைத் திட்டங்கள் மற்றும் வறட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு, கசிவுகளைச் சரிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்குமாறு நாட்டின் தனியார் நீர் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக அந்த முகமை தெரிவித்துள்ளது.

புதன்கிழமை அன்று, நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் மாதத்திற்கான அளவீடுகளை இறுதிசெய்துவிட்டதாகவும், அதன்படி இங்கிலாந்து முழுமையும் அந்த மாதத்திற்கான தினசரி வெப்பநிலை சாதனையாக 38 டிகிரி செல்சியஸ் பதிவானதாகவும் அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |