பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு

United Kingdom Heat wave England
By Thiru Aug 10, 2026 09:27 PM GMT
Report

இங்கிலாந்தின் பல பகுதிகள் வறட்சி பகுதிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் வறட்சி அறிவிப்பு

இங்கிலாந்தின் பல பகுதிகளில் நிலவி வரும் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நெருக்கடிகள் காரணமாக நாட்டின் 71.3 சதவீத பகுதிகள் அதிகாரப்பூர்வ வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1836 ம் ஆண்டு பதிவுகள் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த 190 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வறட்சி மாதமாக ஜூலை பதிவானதை அடுத்து இந்த நெருக்கடியானது ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு | Drought Declared In 11 Areas Of England

இந்த வறட்சியின் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் 45 மில்லியன் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 27 மில்லியனுக்கு அதிகமான மக்கள் தற்போது தண்ணீர் பயன்பாட்டை கட்டுப்பாடாக பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் வெப்பநிலை பதிவான நாட்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் லாங் மார்ச் 7ஏ ராக்கெட் வெடித்து சிதறியது: கடலில் விழுந்த ChinaSat-4B செயற்கைக்கோள் பாகங்கள்

சீனாவின் லாங் மார்ச் 7ஏ ராக்கெட் வெடித்து சிதறியது: கடலில் விழுந்த ChinaSat-4B செயற்கைக்கோள் பாகங்கள்

இதில் ஜூலை மாதத்தில் மட்டும் 13 நாட்கள் வெப்பநிலை அதிகமான அளவு பதிவாகி மக்களை வாட்டியுள்ளது.

அமைச்சர்கள், நீர் நிறுவனங்கள், விவசாய அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்கள் உள்ளடக்கிய தேசிய வறட்சிக் குழு அவசர கூட்டத்தை நடத்திய பிறகு, நிலைமை மிகவும் மோசமாக மாறி வருவதாக எச்சரித்துள்ளனர்.

நாட்டின் உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு | Drought Declared In 11 Areas Of England

வறட்சி அறிவிக்கப்பட்ட பகுதிகள்

கிழக்கு மிட்லாண்ட்ஸ், லிங்கன்ஷயர் & நார்தம்ப்டன்ஷயர், கென்ட் 7 கிழக்கு சசெக்ஸ், சோலென்ட் & சவுத் டவுன்ஸ், கிழக்கு ஆங்லியா, ஹார்ட்போர்ட்ஷயர், லண்டன், தேம்ஸ் பள்ளத்தாக்கு, டெவோன் & கார்ன்வால், வெசெக்ஸ் மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் ஆகிய பகுதிகள் வறட்சி பகுதிகளாக அவசர வறட்சிக் குழு அறிவித்துள்ளது.

கூடுதலாக வறண்ட வானிலை நிலவும் கும்ப்ரியா & லங்காஷயர், கிரேட்டர் மான்செஸ்டர், மெர்சிசைடு & செஷயர், வடகிழக்கு மற்றும் யார்க்ஷயர் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US