சுவிட்சர்லாந்தில் வறட்சி ஏற்படலாம்: நிபுணர்கள் கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
உலக செல்வந்தர்கள் கோடையை செலவிடுவதற்காகச் செல்லும் சுவிட்சர்லாந்தில், கோடையில் வறட்சி ஏற்படலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
தண்ணீரை சேமிப்பது குறித்து சிந்திக்கவேண்டிய நேரம்
சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக கிட்டத்தட்ட மழையோ அல்லது பனியோ இல்லை. ஆக, தண்ணீரை சேமிப்பது குறித்து சிந்திக்கவேண்டிய நேரம் இது என கருதுகிறார் நிபுணர் ஒருவர்.
தற்போதைக்கு சுவிட்சர்லாந்தில் அன்றாட வாழ்வை பாதிக்கும் அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்றாலும், இந்த கோடையில் தண்ணீர் பிரச்சினைகள் உருவாகலாம் என கருதுகிறார் தண்ணீர் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் நிபுணரான Grégoire Mariethoz பொதுவாக கோடையில் பெய்யும் மழை நிலத்தடி நீராக மாறாது.
image - © Jan Gajdosik | Dreamstime.com
காரணம், அது ஒன்றில் வெயிலில் ஆவியாகிவிடும், அல்லது கோடைத் தாவரங்களால் பயன்படுத்தப்படுவிடும், அது நிலத்துக்குள் செல்லாது. ஆக, குளிர்காலத்தில் பெய்யும் மழைதான் பூமிக்குள் இறங்கி நிலத்தடி நீராக மாறும்.
ஆனால், இந்த குளிர்காலத்தில் சரியான மழையோ பனியோ இல்லை. ஆகவே, நிலத்தடி நீர் இல்லையென்றால், கோடையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
நிபுணர்கள் ஆலோசனை
ஆகவே, இப்போதே சுவிட்சர்லாந்து தண்ணீரை சேமிக்க கற்றுக்கொள்ளவேண்டும் என ஆலோசனை கூறுகிறார் Grégoire.
பயன்படுத்தப்பட்ட தண்ணீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் வறட்சியை எதிர்கொள்ளலாம் என்றும், ஆழமான ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீரை எடுத்துப் பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறார் அவர்.