வறட்சியால் சுவிட்சர்லாந்தில் சர்க்கரை உற்பத்தி பாதிக்கும் அபாயம்
சுவிட்சர்லாந்தில் நிலவும் வறட்சி காரணமாக, சர்க்கரை உற்பத்தி பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
நம் நாடுகளில் பெரும்பாலும் சர்க்கரை கரும்பிலிருந்து எடுக்கப்படுகிறது. ஆனால், பல நாடுகளில் சுகர் பீட் என்னும் ஒருவகை பீட்ரூட்டிலிருந்து சர்க்கரை தயாரிக்கப்படுகிறது.
சர்க்கரை உற்பத்தி பாதிக்கும் அபாயம்
சுவிட்சர்லாந்திலும் பெருமளவில் சர்க்கரை உற்பத்திக்கு சுகர் பீட் என்னும் தாவரம்தான் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், வறட்சி காரணமாக, சுகர் பீட் விவசாயம் செய்துவரும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதிக வெப்பம் காரணமாக, முதிர்ச்சியடையும் முன்பே சுகர் பீட் தாவரம் அழிந்துபோகிறதாம்.
குறிப்பாக, சுவிட்சர்லாந்திலேயே அதிக அளவில் சுகர் பீட் தாவரம் பயிர் செய்யப்படும் வாட் மாகாணம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாம்.
ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்புள்ள நிலத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள சுகர் பீட் தாவரங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால், சர்க்கரை விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது என்கிறார்கள் விவசாயிகள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |