கர்ப்பிணியுடன் ஆற்றில் நீந்தச் சென்ற நபர்கள்: ஒரு துயரச் செய்தி
அவுஸ்திரேலியாவில் கர்ப்பிணிப்பெண் ஒருவரும், அவருடன் இரண்டு ஆண்களும் ஆற்றில் நீந்தச் சென்ற நிலையில், மூவரும் தண்ணீரில் மூழ்கினர்.
ஆற்றில் நீந்தச் சென்ற நபர்கள்
நேற்று மாலை கர்ப்பிணிப்பெண் ஒருவரும் அவருடன் இரண்டு ஆண்களும் நெவர் நவர் (Never Never River) என்னும் நதியில் நீந்தச் சென்றுள்ளார்கள்.
6.45 மணியளவில், அவர்கள் தண்ணீரில் மூழ்கியதாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
30 வயதுகளிலிருக்கும் அந்த மூவரையும் கரை சேர்த்து அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்துள்ளார்கள் மருத்துவ உதவிக்குழுவினர்.
Shutterstock/SOLARAYS
ஆனால், அந்த ஆண்கள் இருவரும் அங்கேயே உயிரிழந்துவிட்டிருக்கிறார்கள்.
அந்த கர்ப்பிணிப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட யாருடைய அடையாளங்களும் வெளியிடப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |