பிரித்தானியாவில் பட்டப்பகலில் நடந்த பகீர் சம்பவம்: இரங்கல் தெரிவித்த பலர்
கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் வெள்ளிக்கிழமை நண்பகல் இளைஞர் ஒருவரால் குத்திக்கொல்லப்பட்ட தாயார் தொடர்பில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் கொல்லப்பட்டார்
கிரேட்டர் மான்செஸ்டரின் Droylsden பகுதியில் 51 வயதான மிச்செல் ஹாட்கின்சன் என்ற தாயார் கொடூரமான தாக்குதலில் கொல்லப்பட்டார். அவசர மருத்துவ உதவி ஊழியர்கள் கடுமையாக போராடியும் அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனது என்றே கூறுகின்றனர்.
Credit: MEN Media
இந்த விவகாரம் தொடர்பில் 28 வயதான இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபருக்கு உளவியல் பாதிப்பு இருக்கலாம் என்ற தகவலை பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
மிச்செல் அருமையான நபர் எனவும், அவர் குடியிருக்கும் பகுதி மக்களிடம் மிகுந்த அக்கறை கொண்டவர் எனவும் கூறுகின்றனர். மிச்செல் குறித்து தெரிந்தவர்கள் அனைவருக்கும், அவருக்கு ஏற்பட்ட துயரம் தொடர்பில் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Credit: Ian Leonard