கொழும்பில் மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பழக்கம்: சிறைச்சாலை ஆணையர் வேண்டுகோள்
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை பயிலும் மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பழக்கம்
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் சுமார் 230,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அக்குரெஸ்ஸவில் உள்ள கோடபிட்டிய தேசிய பள்ளியில் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆணையர் இந்த தகவலை சுட்டிக்காட்டினார்.

மேலும் தெற்கு மாகாணம் போதைப்பொருள் பழக்கத்தில் பெரிய நிலைக்கு தள்ளப்படும் என உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தெற்கு பகுதி மாகாணம் ஆனது நிழல் உலக நடவடிக்கையில் முதலிடத்தில் இருப்பதாகவும், இலங்கை சிறையில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் இளைஞர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பு நடவடிக்கைகள்

தொடர்ந்து பேசிய சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க, அதிகாரிகளை சிவில் உடையில் நியமித்து இருப்பதாகவும், நீங்கள் பாடசாலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும், நீங்கள் எப்படிச் செல்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள், எங்கு சுற்றித் திரிகிறீர்கள் என்பதை கவனித்து உங்களுக்கு தகவல் எதுவும் கிடைத்தால் உடனே தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் போதைப்பொருளுடன் யாரேனும் இருந்தால் எனது தொலைபேசி எண் 071 859 2683" என்பதை தொடர்பு கொண்டு தகவலை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |