ஜேர்மனியில் போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜேர்மனியில், போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்கள்
சமீபத்தில், ஜேர்மன் தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள போதைக்கு அடிமையானோர் மறுவாழ்வு மையம் ஒன்றில் பேசிய ஃபெடரல் போதைத் தடுப்பு ஆணையரான ஹெண்ட்ரிக் (Hendrik Streeck), ஜேர்மனியில் போதைப்பொருட்களால் பலியானவர்களின் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது தன்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக தெரிவித்த ஹெண்ட்ரிக், ஆண்டுதோறும் இப்படி போதையால் பலியாவோர் எண்ணிக்கை குறித்து அறிவிப்பது ஒரு சடங்கு போல் ஆகிவிட்டதை எண்ணி தான் வருத்தமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில், போதைப்பழக்கத்தால் 2,150 பேர் பலியாகியுள்ளதாகவும், முந்தைய ஆண்டில் பலியானவர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டில் 2,137 பேர் போதைப்பழக்கத்தால் பலியாகியுள்ளார்கள். அதிகபட்சமாக, 2023ஆம் ஆண்டு 2,227 பேர் பலியாகியுள்ளார்கள்.
இப்படி போதையால் உயிரிழந்தவர்களில் நான்கில் ஒருவர், அதாவது 528 பேர் 30 வயதுக்குக் கீழுள்ளவர்கள், இது 2021ஆம் ஆண்டைவிட 53சதவிகிதம் அதிகம்.
போதையால் உயிரிழந்தவர்களில் 106 பேர் 20 வயதுக்குக் கீழுள்ளவர்கள், இது 2021ஆம் ஆண்டைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |