ஒரே நாளில் சர்க்கரை அளவு சர்ரென குறைய வேண்டுமா? அப்போ இந்த கீரையில் டீ போட்டு குடிங்கள்
சர்க்கரை நோயை பொறுத்தவரை உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
அதிலும், இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் வழக்கமான உணவுகளோடு மூலிகைகளையும் சேர்த்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், இரும்புச்சத்து நிறைந்த முருங்கை இலைகள் சர்க்கரையை நிரந்தரமாகக் கட்டுக்குள் வைப்பதில் பேருதவியாக இருக்கும்.
உணவில் இந்த கீரையை சேர்த்து கொள்வதை விட காலையில் வெறும் வயிற்றில் டீ போட்டு குடித்தால் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வரும்.
தேவையான பொருட்கள்
- முருங்கை இலை- ½ கைப்பிடி
- தண்ணீர்- 2 கப்
- இஞ்சி - 1 சிறிய துண்டு
- தேன்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதில் இஞ்சியை துருவி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
கொதித்து வரும் வேலையில் அதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கை இலைகளை சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்கின்ற தண்ணீர் பாதி அளவிற்கு சுண்டும் வரை கொதிக்க விடவும்.
பின் இதை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து கலந்து அருந்தலாம். விரும்பினால் அதில் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |