மதுபோதையில் மாடியிலிருந்து விழுந்த பிரித்தானிய சுற்றுலா பயணி! ஹோட்டல் அறையில் காத்திருந்த அதிர்ச்சி
தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள ஹோட்டலின் 2வது மாடி பால்கனியில் இருந்து விழுந்து பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
பிரித்தானியர் படுகாயம்
பிரித்தானியாவின் லங்காஷயர்(Lancashire), பிளாக்பர்ன்(Blackburn) பகுதியை சேர்ந்த 51 வயது பால் ஹாட்ஃபீல்ட்(Paul Hadfield) என்ற நபர் தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ள விடுதியின் இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
நவம்பர் 4ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில், பிரித்தானிய சுற்றுலா பயணியான பால் ஹாட்ஃபீல்ட் மதுபோதையில் தனது விடுதிக்கு திரும்பியதாக தெரியவிக்கப்படுகிறது.
மேலும் மது போதையில் இரண்டாவது மாடியின் பால்கனியில் இருந்து விழுந்த அவர் கீழே இருந்த இணைய கூடத்தின்(internet cafe) மேற்கூரை மீது விழுந்து அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்துள்ளார்.
மாடியில் இருந்து விழுந்ததால் அங்கு அருகில் இருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அதிர்ச்சியடைந்த ஹோட்டல் நிர்வாகம்
இதையடுத்து அவசர சேவை பணியாளர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து ஹாட்ஃபீல்டை கவனமாக மீட்டனர்.
அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மீட்பு பணியாளர்கள் ஹாட்ஃபீல்டின் விடுதி அறையை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக படுக்கை மற்றும் தரையில் மனித மலம் பூசப்பட்டிருந்தது.
இருப்பினும், பால் ஹாட்ஃபீல்டின் அறையில் சட்டவிரோதமான எந்தப் பொருளும் செயலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதிக்கு ஏற்பட்ட சேதத்திற்கான செலவுகள் குறித்து ஹாட்ஃபீல்டுடன் ஹோட்டல் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று லெப்டினன்ட் தனவீ யாரங்சீ(Thanawee Yarangsee) தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |