குடிபோதையில் செய்த தவறு: வெளிநாட்டவருக்கு சுவிட்சர்லாந்தில் ஆறரை ஆண்டுகள் சிறை
சுவிட்சர்லாந்தில், குடிபோதையில் கார் ஓட்டிய ஒருவர் விபத்தை ஏற்படுத்தியதில் ஒரு மாணவர் உயிரிழந்ததால், குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு, கொலைக்குற்றச்சாட்டாக மாறியுள்ளது.
குடிபோதையில் செய்த தவறு
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், 44 வயது நபர் ஒருவர் குடிபோதையில் அதிவேகத்தில் கார் ஓட்டிச் சென்றுள்ளார்.
அவர் கார் ஓட்டிய வேகத்தைக் கண்ட மற்றொரு காரின் சாரதி பொலிசாரை அழைத்து தகவல் கொடுத்துள்ளார்.
ஆனால், அதற்குள், குடிபோதையில் கார் ஓட்டிய அந்த நபர், அலெக்சாண்டர் (24) என்னும் மாணவரின் சைக்கிள் மீது காரை மோதியதில், அந்த மாணவர் உயிரிழந்துவிட்டார்.
ஆகவே, விபத்தை ஏற்படுத்தி உயிர் பலி வாங்கிய அந்த சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
ஆறரை ஆண்டுகள் சிறை
குற்றவாளி தரப்பு சட்டத்தரணிகள், அந்த வழக்கை, கவனக்குறைவால் ஏற்பட்ட உயிர் பலியாக குறைக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால், குற்றம் சாட்டப்பட்ட நபர் வேகக்கட்டுப்பாட்டை மீறியதுடன், அளவுக்கதிகமாக மதுபானம் அருந்தியிருந்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி, அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
அந்த நபர் போலந்து நாட்டவர் என்பதால், சுவிட்சர்லாந்தில் தண்டனைக்காலத்தை செலவிட்டபின், அவரது சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படுவார்.
அத்துடன், அவர் 10 ஆண்டுகளுக்கு சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |