குடிபோதையில் பெண் மீது காரை மோதிய நபர்: அடுத்து நடந்த பயங்கரம்
இங்கிலாந்தில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீது குடிபோதையில் ஒருவர் காரை ஏற்றும் அதிரவைக்கும் காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
பெண் மீது மோதிய கார்
இங்கிலாந்தின் சர்ரேயில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 70 வயதுகளிலிருக்கும் ஒரு பெண்மணி மீது கார் ஒன்று மோதியுள்ளது.
இத்தனைக்கும் அந்த கார் வேகமாக செல்லவில்லை. அத்துடன், அந்த பெண் மீது காரை மோதிய நபர், அந்த பெண் கீழே விழுந்தபிறகும் காரை நிறுத்தவில்லை.
அந்த பெண்மணி கீழே விழுந்து கிடக்க, நிதானமாக அந்த பெண் மீது காரை ஏற்றிச் சென்றுள்ளார் அந்த நபர்.
இந்த பயங்கர காட்சியைக் கண்ட பொதுமக்கள் ஓடி வந்து காரை நிறுத்தியபிறகே அவர் காரை நிறுத்தியுள்ளார்.
குடிபோதையில் செய்த பயங்கர செயல்
அந்த பெண் மீது தன் கார் ஏறி இறங்குவது தெரிந்தும் அந்த நபர் காரை நிறுத்தாததற்குக் காரணம், அது குடிபோதையில் இருந்ததுதான்.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு அதிகமாக மது அருந்தி இந்த பயங்கர விபத்தை ஏற்படுத்தியவர் Steven Selwood, (43) என்னும் நபராவார்.
அந்த பெண்மணி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்த வீடியோவை வெளியிட அவர் அனுமதியளித்துள்ளார்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பயங்கரங்கள் குறித்து எச்சரிப்பதற்காக அவர் அந்த வீடியோவை வெளியிட அனுமதித்ததைத் தொடர்ந்து, பொலிசார் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த பயங்கர விபத்தை ஏற்படுத்திய Stevenக்கு இரண்டு ஆண்டுகள், மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.