சுவிஸ் நகரமொன்றில் பெண் வீட்டுக்குள் நுழைந்த நபர் செய்த செயல்: ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
சுவிஸ் நகரமொன்றில், அழைப்பு மணி கேட்டு கதவைத் திறந்த பெண்ணொருவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஏற்பட்டது.
பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாழும் பெண்ணொருவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு அழைப்பு மணி ஒலிப்பதைக் கேட்டு கதவைத் திறந்துள்ளார்.
அப்போது, வாசலில் நின்ற ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து, காலில் அணிந்திருந்த ஷூவைக் கழற்றிப்போட்டுவிட்டு, ஹாலிலிருந்த சோபாவில் படுத்துத் தூங்கத் துவங்கியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனே பொலிசாரை அழைத்துள்ளார். அந்த நபர் மது அருந்திவிட்டு போதையில் இருந்ததால் தவறுதலாக அந்த வீட்டுக்குள் நுழைந்தது விசாரணையில் தெரியவந்தது.
என்றாலும், அவர் அந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழையவில்லை, அந்தப்பெண் கதவைத் திறந்தபிறகுதான் வீட்டுக்குள் நுழைந்துள்ளார் என்பதால் அவர் மீது பொலிசார் நடவடிக்கை எதுவும் எடுக்கமுடியவில்லை.
அவரை பேருந்தில் ஏற்றி அவரது உண்மையான வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் பொலிசார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |