கடைசி பேருந்தை தவறவிட்டதால் டிப்போவில் இருந்த பேருந்தை ஒட்டிச் செல்ல முயன்ற போதை இளைஞர்
போதையில் இருந்த இளைஞர் ஒருவர் கடைசி பேருந்தை தவறவிட்டதால் டிப்போவில் இருந்த பேருந்தை ஒட்டிச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞரின் செயல்
இந்திய மாநிலமான கேரளா, பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லா பகுதியில் அரசு போக்குவரத்து கழக டிப்போ உள்ளது.
இந்த டிப்போவில் இரவு 10 மணியளவில் சாவியுடன் நின்று கொண்டிருந்த பேருந்தில் போதையுடன் ஏறிய இளைஞர் ஒருவர் ஏறி ஒட்டிச் செல்ல முயன்றுள்ளார்.
இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த டிப்போ ஊழியர்கள் அவரை தடுத்தி நிறுத்தினார். ஆனால், அந்த இளைஞர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர், "தான் ஊருக்கு செல்லக்கூடிய 8 மணி பேருந்தை தவறவிட்டதால் இந்த பேருந்தை எடுத்துச் செல்ல முயன்றேன்" என்று கூறியுள்ளார்.
பின்னர், சம்பவத்தை அறிந்த பொலிஸார் விரைந்து வந்து இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, அவர் மல்லப் பள்ளி பகுதியை சேர்ந்த ஜெபின்(வயது34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |