விபத்தில் உயிர்பலி வாங்கிவிட்டு நிம்மதியாக தூங்கச் சென்ற அரசியல்வாதியின் மகன்
Drunk politician’s son rams car into scooter in Kolhapur, kills 2 men: அரசியல்வாதி ஒருவரின் மகன் குடிபோதையில் ஏற்படுத்திய விபத்தில் இருவர் பலியாகியுள்ளார்கள்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணியளவில், மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள கோஹல்பூர் என்னுமிடத்தில், உறவினர்களான உமேஷ் (Umesh Vilas Patharut, 32) மற்றும் கணேஷ் Ganesh Sunil Patharut, 34) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது.
கார் மோதியதில் வெகு தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட உமேஷும் கணேஷும் உயிரிழந்துவிட்டார்கள். அவர்கள் தூக்கி வீசப்படும் பயங்கர காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
நிம்மதியாக தூங்கச் சென்ற அரசியல்வாதியின் மகன்
இதற்கிடையில், காரை மோதி விபத்தை ஏற்படுத்திய பத்மாசின் பாட்டில் (Padmasinh Ranjitsinh Patil, 36) என்பவர், விபத்து நடந்ததை அறிந்தும், காரை நிறுத்தாமல், அமைதியாக காரை யூ டர்ன் எடுத்து தன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

பாட்டில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகன் ஆவார். வீட்டுக்குச் சென்ற பாட்டில், காரை வீட்டில் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.
அவரது நண்பர் ஒருவரும், அவரது சகோதரர் ஒருவரும், விபத்தை ஏற்படுத்திய காரை ஒர்க்ஷாப்புக்குக் கொண்டு ரிப்பேர் செய்ய முயன்றுள்ளார்கள்.
அதற்குள், விபத்து குறித்து அறிந்த பொலிசார், நள்ளிரவு 1.15 மணியளவில் பாட்டில் வீட்டுக்கு விரைந்துள்ளார்கள்.
அவர்கள் பாட்டிலை கைது செய்த நிலையில், அவரை சோதனைக்குட்படுத்தியபோது, அவர் அளவுக்கு மீறி மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது.
விபத்தில் கொல்லப்பட்ட உமேஷ், கணேஷ் ஆகிய இருவருக்கும் சிறுபிள்ளைகள் இருப்பதுடன், அவர்கள் மட்டுமே குடும்பத்தில் வருவாய் ஈட்டுபவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த துயர சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.