ரீல்ஸ் எடுக்க போதையில் காரை ஓட்டிய இளைஞர்கள்! தாய், மகன் பலியான கொடூரம்
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் இளைஞர்கள் மதுபோதையில் காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில், தாய்-மகன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதையில் கார் ஓட்டிய இளைஞர்கள்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பவானி சிங், ரோஷன் கான் ஆகிய இருவரும் பார்மர் நகர் நோக்கி காரில் பயணித்தனர்.
அப்போது அவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். இதனால் காரை தாறுமாறாக வேகமாக ஓட்டியுள்ளனர். மேலும் காரில் பயணிக்கும்போதே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்துள்ளனர்.
அப்போது சாலையை கடக்க முயன்ற கலா என்ற பெண் மற்றும் அவரது 13 வயது மகன் மனீஷ் மீது கார் அதிவேகமாக மோதியுள்ளது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தேவிகோட் மாவட்டம் அருகே இச்சம்பவம் நடத்தது.
பொலிஸார் வழக்குப்பதிவு
இதனையடுத்து கட்டுக்கடங்காமல் சென்ற கார் எதிரே வந்த மற்றொரு வாகனத்தின் மீது பலமாக மோதி விபத்திற்குள்ளானது.
இதில் குறித்த இளைஞர்கள் இருவரும் பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றினர்.
பின்னர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |