மதுபோதையில் சாலைநடுவே படுத்திருந்த இளைஞர்: தலைமேல் ஏறிச்சென்ற லொறி
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் சாலையின் நடுவே படுத்திருந்த நிலையில், லொறி ஒன்று தலைமீது ஏறியதில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் பூசாரிவட்டம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் சங்கர் (30). மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த இவர், நேற்று முன்தினம் இரவு மது அருந்தியுள்ளார்.
அதன் பின்னர் அவர் மதுபோதையில் கால் மேல் கால்போட்டு சாலையின் நடுவில் படுத்துவிட்டார். அச்சமயம் சாலையில் வந்த லொறி ஒன்று, சங்கரின் தலை மேல் ஏறி சென்றது.
இதில் சங்கர் தலைநசுங்கி அங்கேயே உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |