தித்திக்கும் சுவையில் சத்தான உலர் பழ லட்டு.., எப்படி செய்வது?
உலர் பழ லட்டு, இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான மற்றும் சத்தான இனிப்பாகும்.
உலர் பழ லட்டு, உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருவதோடு, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சத்தான உலர் பழ லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாதாம் - ½ கப்
- முந்திரி பருப்பு - ½ கப்
- பிஸ்தா - ¼ கப்
- வால்நட் - ½ கப்
- பேரீட்சைப்பழம் - 25
- ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் கடாயில் பாதாம், முந்திரி பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட் சேர்த்து தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.
பிறகு கடாயில் பேரீட்சைப்பழம் சேர்த்து 2 நிமிடம் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து மிக்ஸியில் வறுத்த பருப்புகளை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின்பு மிக்ஸியில் வறுத்த பேரீட்சைப்பழதை சேர்த்து விழுதாக அரைத்து பின்பு அரைத்த பருப்பை சேர்த்து ஒன்றாக கலக்கும் வரை அரைக்கவும்.
இறுதியாக ஏலக்காய் தூள் சேர்த்து, கையில் நெய் தடவி அரைத்த கலவையை எடுத்து உருண்டைகளாக பிடித்தால் சுவையான உலர் பழ லட்டு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |