உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான Dry fruit milkshake.., எப்படி தயாரிப்பது?
காலை உணவை தவிர்ப்பதால், உடல் சீக்கிரமாக சோர்வடைந்து விடும்.
அதன்படி, காலையில் இந்த சத்தான பானத்தை குடிப்பது குழந்தைகளும் விரும்புவார்கள்.
அந்தவகையில், உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான Dry fruit milkshake எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முந்திரி - 10
- பாதாம் - 10
- வால்நட் - 7
- பிஸ்தா - 25
- பேரீச்சம்பழம் - 6
- அத்திப்பழம் - 4
- முலாம்பழ விதைகள் - 1 ஸ்பூன்
- பால் - 1l
- குங்குமப்பூ- 10 இதழ்
- ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முந்திரி, பாதாம், வால்நட், பிஸ்தா, நறுக்கிய பேரிச்சம்பழம், நறுக்கிய அத்திப்பழம், முலாம்பழ விதை சேர்க்கவும்.
பின் இதில் சூடான பால் மற்றும் குங்குமப்பூ இதழை சேர்த்து நன்றாக ஊறவைக்கவும்.

அடுத்து நன்றாக ஊறிய பிறகு இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து கெட்டியான மென்மையான பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு கப் பால் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
இறுதியாக இதில் ஏலக்காய் தூள் சேர்த்து மீதமுள்ள பாலை ஊற்றி கலந்தால் சத்தான Dry fruit milkshake தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |