சிறுபிள்ளை போல CSK வீரர்களை கட்டியணைத்து மகிழ்ந்த டூபிளெஸ்ஸிஸ்! நெகிழ்ச்சி வீடியோ
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணித்தலைவர் டூபிளெஸ்ஸிஸ், சென்னை அணியினரை பார்த்தவுடன் கட்டியணைத்த வீடியோ ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த தென் ஆப்பிரிக்க வீரர் பாப் டூபிளெஸ்ஸிஸ், நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். இவரது தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி 3-யில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் மைதானத்தில் சென்னை அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டபோது பெங்களூர் அணி வீரர்கள் பயிற்சிக்காக அங்கு சென்றனர். அப்போது சென்னை அணியை கண்டவுடன் உற்சாகமான டூபிளெஸ்ஸிஸ், அந்த அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங்கை கட்டியணைத்தார்.
பின்னர் இதர வீரர்களை சந்தித்து கைகுலுக்கி மகிழ்ந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக ஏலத்தின்போது டூபிளெஸ்ஸிஸ்யை CSK தவறவிட்டபோது ரசிகர்கள் கோபமும், வருத்தமுமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
@ChennaiIPL @RCBTweets ?❤️@vp_offl pic.twitter.com/3skpyCRPWN
— GaneshSpark (@Ganesh_Spark96) April 12, 2022