எங்களை விட அவர்கள் தகுதி வாய்ந்தவர்கள்! தோல்வி குறித்து பேசிய பெங்களூரு கேப்டன்
ராஜஸ்தான் அணியிடம் அடைந்த தோல்வி ஏமாற்றமாக இருந்தாலும், பெங்களூரு அணிக்கு சிறந்த வீரர்கள் கிடைத்துள்ளனர் என பாப் டூ ப்ளீஸிஸ் தெரிவித்துள்ளார்.
15வது ஐபிஎல் தொடரில் பாப் டூ ப்ளீஸிஸ் தலைமையில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த ஆண்டு கோப்பையை வென்றுவிடும் என ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். ஆனால், பெங்களூரு அணியின் கனவை குவாலிபையர் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் அணி தகர்த்தது.
தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணி கேப்டன் பாப் டூ ப்ளீஸிஸ், 'மைதானத்தில் நுழைந்தபோதே இது சிறிய இலக்கு என்பதை உணர்ந்தோம். முதல் 3-4 ஓவர்கள் சவால் நிறைந்ததாக இருந்தது. ஒருவேளை 180 ஓட்டங்கள் எடுத்திருந்தால் இந்த மைதானத்திற்கு சரியான ஸ்கோராக இருந்திருக்கும்.
முதல் 6 ஓவர்கள் நாங்கள் ஆடும்போது டெஸ்ட் கிரிக்கெட் போல இருந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் அப்படியே மாறிவிட்டது. RCB-க்கு இது சிறந்த சீசன். மிகவும் பெருமையாக உணர்கிறேன். எங்கு சென்றாலும் ரசிகர்கள் சிறப்பான ரசிகர்களை காண்கிறேன்.
Photo Credit: Twitter
எங்களுக்காக வருகை புரிந்ததற்கும், ஆதரவு அளித்ததற்கும் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகள். சில நம்பமுடியாத அருமையான ஆட்டத்தினை சில வீரர்கள் வெளிப்படுத்தினர்.
குறிப்பாக இந்தியாவின் தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் பட்டேல் மிக சிறப்பாக செயல்பட்டனர். வெளிப்படையாக கூற வேண்டும் என்றால் இது ஏமாற்றமான இரவு தான். உண்மையில், எங்களை விட இந்த வெற்றிக்கு மிகவும் தகுதி வாய்ந்த, வலிமையான ராஜஸ்தான் அணி அணிக்கு எதிராக தான் களமிறங்கினோம்.
எங்கள் அணியில் நல்ல இளமையான, திறமையான வீரர்கள் 3 ஆண்டுகள் திட்டத்துடன் உள்ளனர். அவர்கள் சூப்பர் ஸ்டார்களாக மாறலாம். இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த எதிர்காலமாக ரஜத் இருப்பார்.
டெல்லி-மும்பை போட்டியின்போது ரசிகர்கள் பலர் RCB RCB என எங்களுக்காக கூக்குரலிட்டனர். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் மற்றும் நன்றி' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: BCCI/IPL
An unforgettable season with so many unforgettable moments.
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 27, 2022
We cannot thank you enough for your support, 12th Man Army. ❤️ We tried our best not to let you down.
We’ll be back to #PlayBold next year. ??#WeAreChallengers #IPL2022 #RCB #ನಮ್ಮRCB #PlayOffs #RRvRCB pic.twitter.com/xg5yoZZi7Z