சன்ரைசர்ஸை அடித்து நொறுக்கிய பாப் டூ பிளெஸ்ஸிஸ்! 16 ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தியது.
அனிகேத் வர்மா அதகளம்
விசாகப்பட்டினத்தில் இன்று நடந்த போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 163 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அனிகேத் வர்மா 41 பந்துகளில் 74 ஓட்டங்களும், கிளாசென் 19 பந்துகளில் 32 ஓட்டங்களும் விளாசினர்.
Jump. Timing. Perfection. 🔝
— IndianPremierLeague (@IPL) March 30, 2025
An excellent catch from Jake Fraser-McGurk at the ropes brings an end to Aniket Verma's fighting knock! 💙
Updates ▶️ https://t.co/L4vEDKzthJ#TATAIPL | #DCvSRH | @DelhiCapitals pic.twitter.com/7b6eekZtRC
மிரட்டலாக பந்துவீசிய மிட்சேல் ஸ்டார்க் (Mitchell Starc) 35 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக 5 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை ஸ்டார்க் படைத்தார். இதற்கு முன்பு 2008ஆம் ஆண்டில் அமித் மிஸ்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
பாப் டு பிளெஸ்ஸிஸ் ருத்ர தாண்டவம்
பின்னர் களமிறங்கிய டெல்லி அணியில் பாப் டு பிளெஸ்ஸிஸ் ருத்ர தாண்டவம் ஆடினார். மறுபுறம் ஜேக் பிரேசர் மேக்கர்க் நிதானமாக ஆடினார்.
இந்த கூட்டணி 55 பந்துகளில் 81 ஓட்டங்கள் குவித்தது. சிக்ஸர்களை பறக்கவிட்ட பாப் டு பிளெஸ்ஸிஸ் (Faf du Plessis) 27 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
𝐀 𝐅𝐚𝐟-𝐮𝐥𝐨𝐮𝐬 𝐝𝐢𝐬𝐩𝐥𝐚𝐲 𝐨𝐟 𝐩𝐨𝐰𝐞𝐫 💪
— IndianPremierLeague (@IPL) March 30, 2025
Faf du Plessis entertained the Vizag crowd before departing for 50 (27) 💙#DC are 96/2 after 10 overs.
Updates ▶️ https://t.co/L4vEDKzthJ#TATAIPL | #DCvSRH | @DelhiCapitals pic.twitter.com/lSJ0HxTRfd
அதனைத் தொடர்ந்து ஜேக் பிரேசர் மேக்கர்க் 38 (32) ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த கே.எல்.ராகுல் 5 பந்துகளில் 15 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
எனினும் ஸ்டப்ஸ், பொரேல் அதிரடியில் டெல்லி அணி 16 ஓவரிலேயே 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. பொரேல் 18 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்களும், ஸ்டப்ஸ் 14 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 21 ஓட்டங்களும் விளாசினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |