ரத்த காயத்துடன் பேட்டிங் வந்து விளையாடிய டூ பிளிசிஸ்! வெளியான புகைப்படம்: நெகிழும் ரசிகர்கள்
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் டூ பிளிசிஸ் இரத்த காயத்துடன் விளையாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன் படி முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்தது.
அதன் பின் ஆடி வரும், சென்னை அணி சற்று முன் வரை 13.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில், இப்போட்டியில் சென்னை அணி வீரரான பாப் டுபிளிசிஸ் 30 பந்தில் 43 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பவுலியன் திரும்பினார். அப்போது அவரது காலில் காயம் இருப்பது தெரிந்தது.
இதை உறுதி செய்யும் வகையில் அவர் பீல்டிங் செய்து கொண்டிருந்த போதும், காலில் ரத்த காயத்துடன் பீல்டிங் செய்து கொண்டிருப்பதும் உறுதியானது.
இதைக் கண்ட சென்னை ரசிகர்கள் நெகிழ்ந்து வருகின்றனர்.