ADMK -வின் ஈழத்தமிழர்கள் இரட்டை குடியுரிமை தீர்மானம்... எதார்த்தத்தை உடைக்கும் Advocate Mario Johnson
ஈழத்தமிழர்களின் இரட்டை குடியுரிமை தொடர்பாக அதிமுகவின் தீர்மானம் குறித்து வழக்கறிஞர் மரியோ ஜான்சன் சில விடயங்கள் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஈழத்தமிழர்களின் இரட்டை குடியுரிமை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈழத்தமிழர்களின் நலன் காக்கவும், அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டி வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவின் இந்த தீர்மானம் தொடர்பாக வழக்கறிஞர் மரியோ ஜான்சனிடம் நாம் சில விடயங்களை கேட்டறிந்தோம். அவர் பேசுகையில், "40 ஆண்டு துயரம் தொடர்புடைய பிரச்சனை தான் அதிமுகவின் பொதுக்குழுவில் தீர்மானமாக இயற்றப்பட்டிருக்கிறது.
குடியுரிமை பிரச்சனையில் நடுவன அரசு தெளிவான முடிவு எடுக்காததால் இன்றும் கூட ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் குற்ற பரம்பரையினராக நடத்தப்படுகின்றனர்" என்று கூறினார். மேலும் குடியுரிமை தொடர்பாக வழக்கறிஞர் பேசிய முழு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |