சொதப்பிய இலங்கை வீரர்கள்! மீண்டும் அடி வாங்கிய பொல்லார்டு அணி..ஆனாலும் சிக்ஸருக்கு 1,500 டொலர்கள்
இன்டெர்நேஷனல் லீக் டி20 தொடரில் துபாய் கேபிட்டல்ஸ் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் MI எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது.
ஹோல்டன் அரைசதம்
அபுதாபியின் Sheikh Zayed மைதானத்தில் துபாய் கேபிட்டல்ஸ் மற்றும் MI எமிரேட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய துபாய் அணியில் டாம் பாண்டன் மற்றும் மேக்ஸ் ஹோல்டன் கூட்டணி 88 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய ஹோல்டன் 33 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
@ILT20Official
அடுத்து டாம் பாண்டன் 37 (26) ஓட்டங்களில் அவுட் ஆக, பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேறினர்.
இலங்கை வீரர் ஷானகா 11 (13) ஓட்டங்களில் போல்ட் ஓவரில் பிளெட்சரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
@ILT20Official
துபாய் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் எடுத்தது. வியாஸ்காந்த், மௌஸ்லே தலா 2 விக்கெட்டுகளும், பிராவோ, போல்ட் மற்றும் தாம்சன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஹைதர் அலி அபார பந்துவீச்சு
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய MI எமிரேட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் முகமது வாசீம் (11), குசால் பெரேரா (11) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஆண்ட்ரே பிளெட்சர் பொறுப்புடன் ஆட, ஏனைய வீரர்கள் ஹைதர் அலி, ஸஹிர் கான் பந்துவீச்சில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
@ILT20Official
கேப்டன் பொல்லார்டு 5 பந்தில் ஒரு சிக்ஸருடன் 8 ரன் எடுத்து ஸஹிர் கான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் MI எமிரேட்ஸ் அணி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக அந்த அணியில் ஆண்ட்ரே பிளெட்சர் 38 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் எடுத்தார்.
துபாய் அணியின் தரப்பில் ஹைதர் அலி 3 விக்கெட்டுகளும், ஸஹிர் கான் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
3 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஹைதர் அலி ஆட்டநாயகன் விருது பெற்ற நிலையில், பாரிய சிக்ஸர் அடித்த பொல்லார்டும் விருது பெற்றார்.
Kieron Pollard wins the @DP_World ??????? 6️⃣ award in Match 2️⃣9️⃣ of Season 2 of #DPWorldILT20 #AllInForCricket #MIEvDC pic.twitter.com/S71gJwtqrv
— International League T20 (@ILT20Official) February 10, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |