இவர்தான் அடுத்து பிரித்தானிய மகாராணியார் ஆகவேண்டும்... ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவரின் உறவினர்
இளவரசி கேட்தான் அடுத்து பிரித்தானிய மகாராணியார் ஆகவேண்டும் என்கிறார் அவரது மாமா. இளவரசி கேட்டின் தாய் மாமனாகிய Gary Goldsmith, தன் அக்காவின் மகளான கேட்தான் அடுத்து ராணியாவதற்கு தகுதியானவர் என்கிறார்.
ராஜ குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு மொத்தமாக எல்லாவற்றையும் எவ்வளவு எளிதாக நாசம் செய்துவிடமுடியும் என்பது மேகனைப் பார்த்தாலே புரியும்.
அதற்கு நேர் மாறாக, இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கின்போது, காரின் ஜன்னல் வழியாக தெரிந்த கருப்பு உடை அணிந்த கேட்டின் கண்களைப் பார்க்கும்போது, ராஜ குடும்பத்தில் பிறந்து இளவரசியானவர்களை விட அதிக கம்பீரமாக அவர் தெரிந்தார் என்பதற்கு அந்த புகைப்படமே சாட்சி.
அத்துடன், இறுதிச்சடங்கு முடிந்து தேவாலயத்திலிருந்து திரும்பும்போது, அன்புத் தம்பியாக தான் கருதும் ஹரியிடம் தானே சென்று பேச்சுக்கொடுத்து, பின் அண்ணனையும் தம்பியையும் பேசவிட்டு, தான் சற்று பின்வாங்கிய அந்த அழகை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது.
இளவரசி டயானா, எப்படி ராஜ குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டும், சாதாரண மக்களுடன் நெருங்கிப் பழகினாரோ, அந்த குணமும் கேட்டிடம் உள்ளது.
கணவரின் இறுதிச்சடங்கின்போது மகாராணியாரைப் பார்த்த தான், முதன்முறையாக அவர் தளர்ந்துபோயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தததாக தெரிவிக்கிறார் Gary.
இது ராஜ குடும்பத்தில் மாற்றங்கள் நிகழும் நேரம் என்று கூறும் Gary, என்னைப் பொர்த்தவரை, மகாராணியார் பொறுப்புகளிலிருந்து விலகியபின், வில்லியமும் கேட்டும் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார்.
மருமகள் கேட்டை புகழ்ந்து தள்ளியதுடன் விடவில்லை Gary, ஹரியும் மேகனும் muppetகள் என்று ஒரு போடு போட்டிருக்கிறார். Muppet என்பதற்கு, எடுப்பார் கைப்பிள்ளை, பொம்மலாட்ட பொம்மைகள் மற்றும் முட்டாள்கள் என்றும் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.