இளவரசர் பிலிப்பின் 100வது பிறந்தநாளில்... ஹரி- மேகன் தம்பதி தொடர்பில் கசிந்த முக்கிய தகவல்
மறைந்த இளவரசர் பிலிப்பின் நூறாவது பிறந்தநாளான ஜூன் 10ம் திகதி மேகன் மெர்க்கல் இரண்டாவது பிள்ளையை பெற்றெடுக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 10ம் திகதி மறைந்த இளவரசர் பிலிப்பின் 100வது பிறந்தநாள். இந்த நாளில் மேகன் மெர்க்கல் தமது இரண்டாவது பிள்ளையை பெற்றெடுக்க உள்ளார்.
இதனால், இளவரசர் பிலிப்பின் நினைவாக, பிறக்கவிருக்கும் குழந்தைக்கு பெயர் சூட்டப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெண் பிள்ளை என்றால் ராணியார் தொடர்புடைய பெயரை சூட்டலாம் எனவும் கூறப்படுகிறது. இளவரசர் பிலிப்பின் பிறந்தநாளில் இளவரசர் ஹரிக்கு குழந்தை பிறக்க இருப்பது சிறப்பான விடயம் என்றே அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரசவ திகதி உறுதியானதுமே, இளவரசர் ஹரி பிறக்கவிருக்கும் குழங்தைக்கு சூட்டும் பெயர் தொடர்பில் தமது நெருங்கிய வட்டாரங்களுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.
மேலும் பிறக்கவிருக்கும் குழந்தைக்கு டயானா என பெயர் சூட்டப்படலாம் என்ற கருத்தும் வெளியானது.
மட்டுமின்றி, கலிபோர்னியாவில் உள்ள தமது இல்லத்திலேயே பிள்ளையை பெற்றெடுக்கவும் மேகன் முடிவு செய்துள்ளாராம்.