காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி: நள்ளிரவில் அரங்கேறிய நடுங்க வைக்கும் சம்பவம்
ஆந்திராவில் தவறான உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் வாசு(49). இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சொப்னபிரியா(45).
சொப்னபிரியாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
மனைவியின் நடவடிக்கை தவறாக இருப்பதை அறிந்த வாசு அவரிடம் பலமுறை எடுத்துக்கூறியும் மீண்டும் அதே தவறை செய்து வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த வாசு சம்பவத்தினத்தன்று மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து விட்டு போதையில் உறங்கிவிட்டார்.
அப்பொழுது சொப்னா மற்றும் மணிகண்டன் இருவரும் சேர்ந்து வாசுவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.
தொடர்ந்து, சொப்னா தனது சொந்தக்காரர்களிடம் வாசு மாரடைப்பினால் இறந்து விட்டதாக கூறி நாடகமாடியுள்ளார்.
இதனையடுத்து தனது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக வாசுவின் தாயார் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், சொப்னாவின் தகாத உறவு பற்றி தெரியவர போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        