ஒரு லேப்டாப்பால் பாதிவழியில் தரையிறக்கப்பட்ட விமானம்
அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்து நோக்கி புறப்பட்ட ஒரு விமானம், ஒரு லேப்டாப்பால் அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் தரையிறங்க நேர்ந்தது.
லேப்டாப்பால் பாதிவழியில் தரையிறக்கப்பட்ட விமானம்
கடந்த வாரம், அமெரிக்காவின் வாஷிங்டனிலிருந்து சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நோக்கி, யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று புறப்பட்டது. +

சிறிது நேரத்தில் பயணி ஒருவர் தனது லேப்டாப்பை விமானத்தின் ஓரத்திலிருந்த இடைவெளியில் விட்டுவிட்டார்.
அது விமானத்தின் சரக்குகள் வைக்கும் இடத்தில் சென்று விழ, தகவலறிந்த விமானி, Newark விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
விமானப் பணியாளர்கள் சென்று அந்த லேப்டாப்பை மீட்டு அதன் உரிமையாளரிடம் சேர்த்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், லேப்டாப்பின் பேட்டரி பழுதுபடுமானால், அதனால் தீப்பற்றும் அபாயம் உள்ளது.
ஆகவேதான் விமானி உடனடியாக விமானத்தைத் தரையிறக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |