கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை பகிர்ந்த இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி: அழகிய குழந்தைகளுடன் வெளியான புகைப்படம்
சசெக்ஸ் தம்பதியர் தங்களது அதிகாரப்பூர்வ கிறிஸ்துமஸ் அட்டையில் தங்களது குடும்ப வாழ்க்கையின் ஓர் அரிய தருணத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளனர்.
இதயத்தை வருடும் இந்த படங்கள், இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லிலிபெட் ஆகிய தங்களது குழந்தைகளுடன் இனிமையான விளையாட்டு நிறைந்த நாளைக் கழித்து கொண்டிருக்கும் தம்பதியரைக் காட்டுகின்றன.
The Sussexes share highlights of their year on the 2024 Archewell holiday card: pic.twitter.com/8GBeNwM2Eb
— Omid Scobie (@scobie) December 16, 2024
தங்களது குழந்தைகளின் தனியுரிமையைப் பாதுகாப்பதே முக்கிய கவனமாக இருந்தாலும், இந்த புகைப்படங்கள் அவர்களது வாழ்க்கையின் இனிமையான தருணங்களை வெளிப்படுத்துகின்றன.
மூன்று நாய்களுடன் நடந்து செல்லும் குடும்பத்தின் அழகிய படம் ஒன்றில், ஆர்ச்சி(Archie) மற்றும் லிலிபெட்(Lilibet) இருவரும் தங்களது பெற்றோரான இளவரசர் ஹரி மற்றும் மேகனை தழுவ ஓடி வருவதை பார்க்க முடிகிறது.
இந்த அட்டையில் உள்ள மற்றொரு புகைப்படத்தில் மேகன் ஒரு சிறுமியை தழுவிக் கொண்டிருக்கும் காட்சி ஒன்றும், மற்றொரு படத்தில் ஹாரி(Harry) தனது கையை மேகனின்(Meghan) தோளில் வைத்து அவர்களுக்கிடையேயான அன்புப் பிணைப்பைக் காட்டுகிறது.
சசெக்ஸ் தம்பதியர்(Duke and Duchess of Sussex) தொடர்ந்து தங்களது குழந்தைகளை அதிகப்படியான ஊடக கவனத்திலிருந்து பாதுகாப்பதை முன்னுரிமையாக கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |