வாழ்க்கை குறுகியது, கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை..! கௌஷிக் மரணத்தால் மனமுடைந்த நடிகர் துல்கர் சல்மான்
நல்ல சினிமாவுக்கு எப்போதும் துணை நிற்கும் ஊக்கத்திற்கும், கருணைக்கும் நன்றி கௌஷிக் - துல்கர் சல்மான்
கௌஷிக்கும் நானும் ஒருவரையொருவர் பெரும்பாலும் ட்விட்டர் மூலமாகவும், சில தனிப்பட்ட தொடர்புகள் மூலமாகவும் அறிவோம் - துல்கர் சல்மான்
உங்கள் குடும்பம் என்ன செய்ய போகிறது என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என கௌஷிக்கின் மரணத்திற்கு நடிகர் துல்கர் சல்மான் வேதனை தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட விமர்சகர் கௌஷிக் இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இது திரையுலகினருக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல நடிகர் துல்கர் சல்மானின் சமீபத்தில் வெளியான சீதா ராமம் திரைப்படம் உலகளவில் 50 கோடியை எட்டியதாக கௌஷிக் ட்வீட் செய்திருந்தார்.
அதன் பின்னர் சில மணிநேரங்களில் அவரது மரணம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த துல்கர் சல்மான் தனது பதிவில் மனமுடைந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 'உண்மையிலேயே இது மனவேதனை அளிக்கிறது. இது உண்மையாக இருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன். உங்கள் குடும்பம் என்ன செய்ய போகிறது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. கௌஷிக்கும் நானும் ஒருவரையொருவர் பெரும்பாலும் ட்விட்டர் மூலமாகவும், சில தனிப்பட்ட தொடர்புகள் மூலமாகவும் அறிவோம்.
நீங்கள் எப்போதும் எனக்கு மிகுந்த அன்பையும், ஆதரவையும் கட்டியிருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார். மேலும் அவரது மற்றோரு ட்வீட்டில். 'வாழ்க்கை மிகவும் குறுகியது, உங்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் சகோதரா.
நல்ல சினிமாவுக்கு எப்போதும் துணை நிற்கும் ஊக்கத்திற்கும், கருணைக்கும் நன்றி. இந்த ட்வீட்களை என்னால் சரியாக சொல்ல முடியவில்லை. இது என்னை தனிப்பட்ட முறையில் தாக்குகிறது. நான் மிகவும் வருந்துகிறேன்' என கூறியுள்ளார்.