திமுக அமைச்சர்களை கலாய்த்த ரஜினிகாந்த்.., பல்லு போயி, தாடி வளர்ந்து என்று துரைமுருகன் பதிலடி
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் திமுக அமைச்சர்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய நிலையில் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் பேசியது
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. முதலமைச்சர் கையில் இருந்து புத்தகத்தை வாங்குவது பெருமையாக உள்ளது.
தமிழ் இனத்திற்காக பாடுபட்டவர் கருணாநிதி. அவர் ஒரு ஆலமரம். அவரது மறைவுக்கு பிறகு அவரின் புகழ் வளர்ந்து கொண்டே இருக்கிறது. எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக கையாண்டவர் கருணாநிதி.
கலைஞர் நூற்றாண்டு விழாவை விமரிசையாக கொண்டாடப்பட்டது போல வேறு எந்த தலைவர்களுக்கும் கொண்டாடப்படவில்லை. ஒரு கட்சியை காப்பது மிகவும் கடினம். ஆனால், அதனை முதலமைச்சர் சிறப்பாக செய்கிறார்.
பள்ளியில் புதிய மாணவர்களை விட, பழைய மாணவர்களை சமாளிப்பது கடினம். திமுகவில் உள்ள பழைய தலைவர்களை முதலமைச்சர் சிறப்பாக சமாளித்து வருகிறார்.
அதிலும், துரைமுருகன் என ஒருவர் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். ஒரு விடயத்தை செய்து எப்படி இருக்கிறது என கேட்டால் சந்தோஷம் என்று கூறுவார்.
நல்லா இருக்கிறது என்பதற்காக சந்தோசம் என்று சொல்கிறாரா? ஏண்டா இப்படி செய்கிறீர்கள் என்பதற்காக சந்தோசம் என்று சொல்கிறாரா? என்று புரியாது" என்றார்.
துரைமுருகன் பதிலடி
இந்நிலையில் ரஜினிகாந்த் பேசிய கருத்து தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளர்ந்து, சாகுற நிலையில் உள்ளவர்கள், வயதானவர்கள் அனைவரும் நடிக்கின்றனர்.
இதனால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. அதை மறந்துட்டு ரஜினிகாந்த் பேசுகிறார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |