மன்னிப்பு என்பது சீமான் வரலாற்றிலேயே கிடையாது? டிஐஜி வருண்குமாருக்கு சாட்டை துரைமுருகன் பதிலடி
மன்னிப்பு என்பது சீமானின் வரலாற்றிலேயே கிடையாது என்று டிஐஜி வருண்குமார் பேசிய கருத்துக்கு சாட்டை துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
சாட்டை துரைமுருகன் பதிவு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தம்மிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு தொழிலதிபர் மூலம் முயற்சி செய்தார் என டிஐஜி வருண்குமார் புகார் தெரிவித்தார்.
இவரின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மறுப்புத் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "நேற்று திருச்சியில் வருண்குமார் என்பவர் தனிப்பட்ட முறையில் (அதிகாரியாக வரவில்லை என அவரே சொல்கிறார் ) சீமான் குறித்து பொதுவெளியில் பொய்யான தகவல்களை பரப்பி இருக்கிறார் !
தொழிலதிபர் மூலமாக சீமான் தனக்கு செய்தி அனுப்பியதாக சொல்லும் வருண்குமார், யார் அந்த தொழிலதிபர் என்பதைச் சொல்வாரா? மைக் கிடைத்தால் என்ன வேண்டுமென்றாலும் பேசுவீங்களா வருண்?
நாம்தமிழர் கட்சிக்கும் உங்களுக்கும் மோதல் என சொல்றீங்க? 36 லட்சம் மக்களால் வாக்கு செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநில கட்சி மாவட்ட கண்காணிப்பாளரை எதற்கு எதிர்க்க வேண்டும்?
உங்களின் பொய் வழக்குகளும் வழக்கின் போது பறிக்கப்பட்ட அலைபேசிகளை வைத்து நீங்கள் செய்யும் மூன்றாம் தர வேலைகளையும் பொது சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது !
நீங்கள் போன அதே நீதிமன்றத்தில் நீங்கள் எங்களுக்கு எதிராக செய்த மூன்றாம் தர வேலைகளை ஆதாரத்துடன் ஆவணப்படுத்துகிறோம்! சட்டமும் நீதியும் யார் பக்கம் இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் !
மற்றபடி மன்னிப்பு என்பது சீமானின் வரலாற்றிலேயே கிடையாது. யார் தூது விட்டது ?யார் கெஞ்சியது? யார் பத்திரக்கையாளர்களை அனுப்பி பேசியது ?என்பதை விலாவாரியாக பேசுவோம்!" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |