ருத்ரதாண்டவம் ஆடிய டி காக்! ரஷித் கான் அணியை புரட்டியெடுத்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்
தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் மும்பை கேப்டவுன் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீழ்த்தியது.
டூசன் - டேவிட் பார்ட்னர்ஷிப்
டர்பனின் கிங்ஸ்மெட் மைதானத்தில் நடந்த 23வது போட்டியில் ரஷித் கானின் மும்பை கேப்டவுன் மற்றும் டி காக்கின் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. வான் டர் டூசன் 43 ஓட்டங்களும், டிம் டேவிட் 33 ஓட்டங்களும் எடுத்தனர்.
டர்பன் அணியின் தரப்பில் பிரிட்டோரியஸ் 2 விக்கெட்டுகளும், வில்லே, மஹாராஜ், டாப்லே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Quinton ??molition on display ?
— Durban's Super Giants (@DurbansSG) February 2, 2023
Standing Tall through the pain and HOW ?#DSGvMICT | #SuperGiantsStandTall | #DurbansSuperGiants | #DSG pic.twitter.com/sznR5zC7RE
ருத்ர தாண்டவம் ஆடிய டி காக்
பின்னர் களமிறங்கிய டர்பன் அணியில், தொடக்க வீரர் குவிண்டான் டி காக் அதிரடியில் மிரட்டினார். 41 பந்துகளை எதிர்கொண்ட அவர் 63 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
டி காக்கின் விக்கெட்டுக்கு பின் பவுண்டரிகளை விரட்டிய கீமோ பவுல் 18 பந்துகளில் 31 ஓட்டங்கள் விளாசினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் இறுதிவரை களத்தில் நின்ற மேத்யூ பிரீட்ஸ்க்கே 48 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.
BREETZKE. YOU. BEAUTY! ??#DSGvMICT | #SuperGiantsStandTall pic.twitter.com/HepHkGp7Ew
— Durban's Super Giants (@DurbansSG) February 2, 2023
டர்பன் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணியின் தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அரைசதம் அடித்த டி காக் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
Gave it our all, till the very end.
— MI Cape Town (@MICapeTown) February 2, 2023
This one stings, but we will always believe in our team.#OneFamily pic.twitter.com/alRFqOzvP3