நீ ஒருத்தனுக்கு பிறந்திருந்தால்- ஆவேசமான துர்கா ஸ்டாலினின் தம்பி! என்ன நடந்தது?
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாக அறிக்கை கொடுத்தது முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவியான துர்கா ஸ்டாலினின் தம்பி மரு. ஜெயராஜாமூர்த்தி என வெளியான தகவலுக்கு பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் பரிந்துரைத்தனர்.
தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவ குழுவினரும் செந்தில் பாலாஜியை பரிசோதித்து அதே அறிக்கையை சமர்பித்தனர்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இஎஸ்ஐ மருத்துவ குழுவிற்கு தலைமை வகித்தது துர்கா ஸ்டாலின் அவர்களின் தம்பி என தகவல்கள் வைரலாக பரவியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
என் தலைமையில் மருத்துவர்கள் சென்றதாக கூறிய தகவல் உண்மையில்லை, அது என்னுடைய கட்டுப்பாட்டில் வராது, எங்களுடைய கட்டுப்பாட்டில் வருவது ஏழு மருத்துவமனைகள் மட்டுமே.
கேகே நகர் மருத்துவ கல்லூரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும், எத்தனை பேர் சென்றனர், யார் அவர்கள் என்று கூட எனக்கு தெரியாது.
பொய் செய்திகளை மக்கள் விரும்பி படிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது, அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்படி வதந்திகளை பரப்பி விடுகிறார்கள்.
முட்டாப்பயலுக, சங்கிகள் முட்டாள்கள் என்றால் முதலில் நம்ப மாட்டேன், ஆனால் இப்போது.
ஒருத்தனுக்கு பிறந்திருந்தால் நீங்கள் கூறியதை உண்மை என நிரூபிக்க முடியுமா? என ஆவேசமாக பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |