கனடாவில் சென்னை தம்பதியர் மற்றும் குழந்தை பலியாக காரணமாக இருந்த விபத்து: சமீபத்திய தகவல்
கனடாவில், சென்னை தம்பதியர் மற்றும் குழந்தை பலியாக காரணமாக இருந்த விபத்து தொடர்பில் பொலிசார் இருவர் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்கள்.
சாலை விபத்தில் பலியான சென்னை குடும்பம்
கனடாவில், 2024ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை பொலிசார் துரத்த, அவர் வேன் ஒன்றில் தப்பியோட, அவரது வேன் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த விபத்தில், காரில் பயணித்த சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் ஸ்ரீனிவாசபிள்ளை (60), அவரது மனைவியான மஹாலக்ஷ்மி அனந்தகிருஷ்ணன் (55)மற்றும் தம்பதியரின் பேரப்பிள்ளையான மூன்று மாதக்குழந்தை ஆதித்யா ஆகியோர் பலியானார்கள்.

தம்பதியர், தங்கள் மகன் கோகுல்நாத் (33), மருமகள் அஷ்விதா ஜவஹர் (27) மற்றும் பேரனான மூன்று மாதக் குழந்தை ஆதித்யா விவான் ஆகியோரைப் பார்ப்பதற்காக கனடா சென்றிருந்த நிலையில் விபத்தில் பலியாக, அந்தக் குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
சமீபத்திய தகவல்
இந்நிலையில், அந்த விபத்துக்கு ஒரு வகையில் காரணமான, அதாவது, மதுபானக்கடையில் திருடிய நபரை துரத்திய பொலிசார் இருவர் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்கள்.
Sgt. ரிச்சர்ட் ஃப்லின் (Richard Flynn) மற்றும் Const. ப்ராண்டன் ஹாமில்ட்டன் (Brandon Hamilton) என்னும் இருவரே விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளவர்கள்.
அவர்கள் இருவர் மீதும், அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்தது உட்பட ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |