இலங்கை மக்களால் விரும்பி சாப்பிடப்படும் துரியான் பழம்! இவ்வளவு நன்மைகளா?
மருத்துவ நன்மை கொண்ட துரியான் பழம் இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் விளைகிறது.
துரியான் பழம் சாப்பிடுவதால் நடக்கும் அற்புதங்கள்
சிலருக்கு உடல் சத்து குறைவினாலும், மது, புகை போதை போன்ற தீய பழக்கங்களினாலும் உடல் வலுவிழந்து காணப்படும். இதற்கு இவர்கள் வாரம் இருமுறை துரியான் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
இரத்தத்தில் அதிக கொழுப்பு பொருட்கள் படிவதால் இரத்த அடைப்பு ஏற்பட்டு இரத்தம் அசுத்தமாகிறது. இந்த கொழுப்பு சத்தை கரைத்து கலோரிகளாக மாற்றி இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.
கீரை வகைகளும் அதை சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத பயன்களும்! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
மலச்சிக்கலை நீக்கும் குணம் துரியான் பழத்திற்கு உண்டு. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியைக் ஏற்படுத்தும்.
துரியான் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், அதனைச் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம்.
துரியான் பழத்தில் பாஸ்பரஸ் அதிகம் நிறைந்திருப்பதால், அதனைச் சாப்பிட பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
பொதுவாக கருப்பை பலவீனமாக இருந்தால் கருத்தரிக்க முடியாது. ஒருவேளை கருத்தரித்தாலும், சில நாட்களில் கலைந்துவிடும். எனவே இத்தகைய பிரச்சனை உள்ள பெண்கள், துரியான் பழத்தை சாப்பிட்டு வந்தால், கருப்பை பலமாகி, ஆரோக்கியமாக ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்