உடனடியாக ஓய்வு பெறுகிறேன்! சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திர வீரர் அறிவிப்பு
தென்னாபிரிக்கா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டுவைன் ப்ரெடோரியஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
10-ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும்
இது தொடர்பில் டுவைன் பேசுகையில், நான் இனி முழுக்க முழுக்க டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளேன். மீதமுள்ள என் கிரிக்கெட் வாழ்க்கையை அதற்காக செலவழிப்பேன்.
10-ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவேன். எனது உடல்நிலை மற்றும் காயத்தை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளேன். பல ஆண்டுகளாக நான் விளையாடிய மற்றும் எதிராக விளையாடிய அனைத்து வீரர்களும் எனது வாழ்க்கையில் நீங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். ஒன்று அல்லது இருவரை மட்டும் முன்னிலைப்படுத்துவது மிகவும் கடினம், ஏனென்றால் தாக்கத்தை ஏற்படுத்திய பல வீரர்கள் உள்ளனர் என்றார்.
ipl/Cricket South Africa
முன்னணி ஆல்ரவுண்டராக
தென்னாபிரிக்கா அணிக்காக சில ஆண்டுகள் முன்னணி ஆல்ரவுண்டராக இருந்து வந்த ப்ரெடோரியஸ், 30 டி20 போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.77 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், கரீபியன் ப்ரீமியர் லீகிலும், சவுத் ஆப்ரிக்கா டி20 லீகில் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காகவும், 100 பந்துகள் கொண்ட ‘தி ஹண்ட்ரட்’ லீகில் வேல்ஸ் பயர் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.