CSK கோப்பை வென்றதால்... பொல்லார்ட்டை பின்னுக்கு தள்ளிய பிராவோ! எப்படி தெரியுமா?
கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் சென்னை கோப்பையை வென்றதன் மூலம் பொல்லார்ட்டின் சாதனையை பிராவோ முறியடித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15-ஆம் திகதி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றிய அணி என்ற சாதனையை சென்னை படைத்தது.
இதைத் தொடர்ந்து சென்னை அணியின் ஆல் ரவுண்டரான டேவைன் பிராவோ, மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான பொல்லார்ட்டின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது பொல்லார்ட் இதுவரை 15 முறை டி20 சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இருந்துள்ளார்.
அதே போன்று பிராவோவும் 15 டி20 லீக் தொடர்களில் சாம்பியன் ஆன அணியில் இருந்தார். இந்நிலையில், தற்போது சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதன் மூலம், அது பிராவோவுக்கு 16-ஆக மாறியுள்ளது.
இதன் மூலம் அதிக டி20 லீக்கில் வெற்றி பெற்ற அணியில் இருந்த வீரர் என்ற சாதனையில் பொல்லார்ட்டை பின்னுக்கு தள்ளி பிராவோ முதல் இடத்தை பிடித்துள்ளார்.
உலகில் நடக்கும் பல டி20 லீக் தொடர்களில் பிராவோ மற்றும் பொல்லார்ட் முக்கிய வீரராக இருப்பது குறிப்பிடத்தக்கது.