இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: E-Went Lightning அறிமுகம்
இந்தியாவில் புதிய சக்திவாய்ந்த E-Went Lightning எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாரோகி உத்யோக் குழுமத்தின்(Saraogi Udyog Group) EV பிரிவு E-Went உருவாக்கிய Lightning மின்சார ஸ்கூட்டர், இந்தியாவின் புதிய தலைமுறைக்கான ஸ்டைலிஷ் மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த வாகனமாக அறிமுகமாகியுள்ளது.
“சவாரி செய்யும் ஒவ்வொரு தருணமும் மகிழ்ச்சி தரும்” என்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர், புதுமை, நம்பகத்தன்மை மற்றும் நீடித்த பயன்பாட்டை கொண்டதாக இருக்கும் வலியுறுத்துகிறது.

தொழில்நுட்ப அம்சங்கள்
Maxx Power Technology மூலம் 20 சதவீதம் அதிக ஆற்றல்.
3.5 kWh லித்தியம் பேட்டரி, IP67 BLDC ஹப் மோட்டார்.
அதிகபட்ச வேகம் 70 kmph.
ஓரே சார்ஜில் 130 km வரை பயணம்.
Eco, Ride, Power என மூன்று பயண முறைகள்.
வடிவமைப்பு மற்றும் வசதிகள்
இத்தாலிய தோல் இருக்கை, டைனமிக் உடல் வடிவமைப்பு, இரட்டை LED புரொஜெக்டர் ஹெட்லாம்புகள் (35 மீட்டர் வரை ஒளி வீச்சு) ஆகியவை Lightning-ஐ தனித்துவமாக்குகின்றன.
12-இஞ்ச் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் மூலம் நகர போக்குவரத்தில் நம்பகமான ஓட்டத்தை வழங்குகிறது.

உத்தரவாதம் மற்றும் விற்பனை
மோட்டாருக்கு 5 ஆண்டு அல்லது 50,000 km உத்தரவாதம், chassis-க்கு 3 ஆண்டு anti-rust உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
ஒற்றை மற்றும் இரட்டை பேட்டரி விருப்பங்களும் கிடைக்கின்றன. தற்போது கிழக்கு இந்தியா, வடகிழக்கு மற்றும் தென் இந்தியாவில் விற்பனை வலையமைப்பு உள்ளது. விரைவில் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
E-Went Lightning, தொழில்நுட்பம், கைவினை திறன் மற்றும் புதுமையை ஒருங்கிணைத்து, “சாதாரண வாகனம் அல்ல - ஒரு அனுபவம்” என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
இந்திய EV சந்தையில் இது புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
E-Went Lightning EV scooter India, Smart electric scooter launch 2025, Maxx Power Technology EV scooter, 130 km range electric scooter India, Stylish EV scooters with leather seat, BLDC hub motor EV scooter, Eco Ride Power modes scooter, Affordable EV scooters India 2025, Saraogi Udyog Group EV launch, ZigWheels E-Went Lightning review