பூட்டிய வீட்டில் இருந்து வெளியேறிய புழுக்கள்... லண்டனில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்
மேற்கு லண்டனில் பெண் ஒருவர் கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, பசியால் துடித்து இறந்த பகீர் சம்பவத்தில் மூவர் குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் என உறுதி
மேற்கு லண்டனில் வசித்து வந்த ஷகிரா ஸ்பென்சர் என்பவர் தனது முன்னாள் அண்டை வீட்டார் காரணமாக பரிதாபமாக மரணமடைந்துள்ளார். இந்த வழக்கில் தற்போது 38 வயதான அஷானா ஸ்டுடோல்ம், அவரது காதலர் ஷான் பென்டில்பரி(26), மற்றும் இவர்களது தோழி லிசா ரிச்சர்ட்சன்(44) ஆகியோர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Credit: facebook and met police
இந்த மூவரும் ஷகிரா ஸ்பென்சரை ஒரு அடிமை போலவே நடத்தியுள்ளனர். மட்டுமின்றி, அவருக்கு உணவாக வெறும் கெட்ச்அப்பை மட்டுமே ஊட்டியுள்ளனர். 35 வயதான ஷகிரா ஸ்பென்சர் இறக்கும் போது வெறும் எலும்பும் தோலுமாக காணப்பட்டதாக நீதிமன்றத்தில் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பரில், மேற்கு லண்டனின் ஈலிங் பகுதியில் உள்ள அவரது குடியிருப்பில் இருந்து புழுக்கள் வெளியேறுவதை அக்கம்பக்கத்தினர் பார்த்த நிலையில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அதிகாரிகள் தரப்பு முன்னெடுத்த சோதனையில், ஷகிரா ஸ்பென்சர்ரின் உடல் மோசமாக சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் சிக்கிய மூவரும் தங்களுக்கு இதில் தொடர்பில்லை என மறுத்து வந்துள்ளனர்.
@Met Police
இந்த நிலையில், திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் டிசம்பர் 11ம் திகதி திங்கட்கிழமை நடுவர் மன்றம் தொடர்புடைய மூவர் மீதான குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளிகள் என்று கண்டறிந்தது.
வேகமாக சேதமடைவதை தடுக்க
ஸ்பென்சரின் அண்டை வீட்டாரான ஸ்டுடோல்ம் மற்றும் அவரது காதலனால் அவர் மூளைச்சலவை செய்யப்பட்டதாகவே விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த இருவரும் ஸ்பென்சரை தனிமைப்படுத்தியதுடன், தகாத தொழிலுக்கு உட்படுத்தப்பட்டு, அவரின் சுயமரியாதை மற்றும் சேமிப்புகள் அனைத்தையும் பறித்துள்ளனர்.
விடிகாலையில் எழுந்து, இந்த மூவரின் குடியிருப்புகளையும் சுத்தம் செய்ய வைத்துள்ளனர். இறுதியில், கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி ஸ்பென்சர் கொடூரமாக தாக்கப்பட்டு அலமாரியில் வைத்து பூட்டப்பட்டார்.
Pictured: Hanwell
தொடர்ந்து 12ம் திகதி அவரது குற்றுயிரான உடல் படுக்கை அறைக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், உரிய சிகிச்சை மற்றும் உணவின்றி, அவர் துடித்து இறந்ததாகவே கூறப்படுகிறது.
மேலும், அவரது உடல் வேகமாக சேதமடைவதை தடுக்க, ஐஸ் கட்டிகளை பயன்படுத்தியுள்ளனர். ஆனால் செப்டம்பர் 25ம் திகதி ஸ்பென்சரின் குடியிருப்பில் இருந்து புழுக்கள் கொத்தாக வெளியேறுவதைக் காண நேர்ந்த அண்டை வீட்டார் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பொலிசார் முன்னெடுத்த கடினமான விசாரணையில் அந்த மூவரும் ஸ்பென்சருக்கு என்ன செய்தார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |