பாடசாலையில் நேர்ந்த மோசமான சம்பவம்... முதல் முறையாக மனம் திறந்த இளவரசி டயானாவின் சகோதரர்
11 வயதில் பாடசாலையில் துஷ்பிரயோகத்திற்கு இரையானதை தனது புதிய நினைவுக் குறிப்பில் இளவரசி டயானாவின் சகோதரர் ஏர்ல் ஸ்பென்சர் வெளிப்படுத்தியுள்ளார்.
சிறார் துஷ்பிரயோக பேர்வழி
மெய்ட்வெல் ஹால் உறைவிடப் பள்ளியில் ஏர்ல் ஸ்பென்சர் அனுபவித்த அதிர்ச்சியூட்டும் துஷ்பிரயோகத் தாக்குதல்கள் மற்றும் எதிர்கொண்ட வன்முறை பற்றிய திகைப்பூட்டும் விவரங்களை அவர் தமது நினைவுக் குறிப்பில் பகிர்ந்துள்ளார்.
தற்போது 59 வயதாகும் ஏர்ல் ஸ்பென்சர் தெரிவிக்கையில், தொடர்புடைய பாடசாகையில் அப்போது பணியாற்றிய ஒரு உதவி மேட்ரன், சிறார் துஷ்பிரயோக பேர்வழி தம்மையும் சக மாணவர்களையும் தொடர்ந்து இரையாக்கி வந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் John Porch என்ற தலைமை ஆசிரியரின் கொடூரமான தண்டனைகளும் மறக்க முடியாதவை என தெரிவித்துள்ளார். அந்த 5 ஆண்டுகள் தாம் அனுபவித்த கொடுமைகள் காரணமாக உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெய்ட்வெல் ஹால் உறைவிடப் பள்ளியில் தாம் அனுபவித்த அந்த நெருக்கடி, தமது முதல் இரு திருமணங்களை சீர்குலைத்ததாகவும் ஏர்ல் ஸ்பென்சர் குறிப்பிட்டுள்ளார். எங்களில் பலர் மைட்வெல்லை விட்டு வெளியேறிய போது பேய்கள் எங்களுக்குள் புகுந்துள்ளதை உணர்ந்தோம் என்றார்.
பணம் செலுத்தி உறவு
தற்போது இளவரசி டயானா அடக்கம் செய்யபப்ட்டுள்ள பகுதியில் இருந்து 10 மைல்கள் தொலைவில் தான் மெய்ட்வெல் ஹால் அமைந்துள்ளது. தற்போது ஆண்டுக்கு 31,700 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கின்றனர்.
தனது நினைவுக் குறிப்பில் ஏர்ல் ஸ்பென்சர் தெரிவிக்கையில், 19 அல்லது 20 வயது மதிக்கத்தக்க பெண் உதவி மேட்ரன் ஒருவரது கண்காணிப்பில் இருந்த போது, முதல் முறையாக உதட்டில் முத்தம் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெய்ட்வெல் ஹால் உறைவிடப் பள்ளியில் இருந்து பெற்ற அனுபமாக இருக்கலாம், 12 வயதில் இத்தாலியில் தனது தாயார் மற்றும் வளர்ப்பு தந்தை ஆகியோருடன் விடுமுறையில் இருந்தபோது ஒரு பாலியல் தொழிலாளியுடன் பணம் செலுத்தி உறவு வைத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அந்த சம்பவமே முதல் முறையாக தமது கன்னித்தன்மையை இழக்க காரணமாகவும் அமைந்தது என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |