காதலர் தினத்திற்கு பின்னால் உள்ள உண்மை - கட்டாயம் அறியவும்
உலகம் முழுவதிலுமுள்ள மிக அன்பாக பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாக காதலர் தினம் இருக்கிறது.
இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள்.
அது தான் பலரும் அறிந்த விடயம். ஆனால் இதற்கு பின்னால் வேறு ஒரு சுவாரஸ்யமான மற்றும் புனிதமான கதை ஒன்று இருக்கிறது.
காதலர் தினம்
பெப்ரவரி மாதம் வந்துவிட்டாலே போதும் அனைவரும் மகிழ்ச்சியடைந்து விடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினமானது கொண்டாடப்படுகிறது.
முதலில் ரோஸ் டே எனப்படும் ரோஜா தினம், ப்ரபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே , ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே 14 ஆம் திகதி வரும் வரையில் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்படுகிறது.
உலகின் சில பகுதிகளில் காதலர் தினம் என்பது காதல் ஜோடிகளுக்கு பதிலாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடையே அன்பை வெளிப்படுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.
ஆனால் இந்த நாளிற்கு பின்னால் வேறு ஒரு கதை இருக்கிறது.
காதலர் தினத்திற்கு பின்னால் உள்ள உண்மை
வேலன்டைன்ஸ் டே என்ற தினம் புனித வேலன்டைன்ஸ் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆரம்பகால கிறிஸ்தவ தியாகியின் நினைவாக இது பெப்ரவரி நடுப்பகுதியில் கொண்டாப்படுகிறது.
கி.பி 250 இல் பேரரசர் இரண்டாம் கிளாடியஸ், தேவாலயத்தைத் துன்புறுத்திய காலத்தில் அவர் ஒரு பாதிரியாராக இருந்துள்ளார்.
சிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இளைஞர்கள் திருமணம் செய்யக்கூடாது என்று கிளாடியாஸ் ஒரு ஆணையை பிறப்பித்தார்.
திருமணம் செய்யாமல் இருந்தால் அவர்கள் அன்புக்குரியவர்களின் எண்ணங்கள் மற்றும் கவனிப்புகளால் திசைதிருப்பப்பட மாட்டார்கள் என நம்பினார்.
ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தை தேவாலயமானது புனிதமான செயலாக மாற்றுகிறது.
காதல் செய்துக் கொண்டு இருக்கும் ஜோடிகள் கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என பேரரசரின் கட்டளைகளை மீறி, வாலண்டினஸ் ரகசியமாக திருமணங்களை நடத்தி வைத்தார்.
கட்டளையை மீறி திருமணங்களைச் செய்து வைத்ததற்காக வாலண்டினஸ் சிறைப்பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார். பின் பெப்ரவரி 14 ஆம் திகதியன்று பாதிரியார் வேலண்டைனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்நாளில் சுற்றியுள்ளவர்களிடம் அன்பை பகிர்ந்து கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |