பிரித்தானிய ரயில் நிலையத்தில் அதிகாலையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை: பொலிஸார் விசாரணை
Early morning Woman Assault at Dorset Railway Station: பிரித்தானியாவில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் அதிகாலையில் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
பிரித்தானியாவின் Dorset பகுதியில் அமைந்துள்ள Christchurch ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை 4 மணியளவில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீவிரமான விசாரணையை தொடங்கினர்.
பொலிஸாரின் விசாரணை காரணமாக Christchurch ரயில் நிலையத்தில் எந்தவொரு ரயில்களுக்கு நிற்காமல் தொடர்ந்து பயணித்தன.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறப்பு பொலிஸ் அதிகாரிகள் உரிய உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
அதே நேரத்தில் குற்றவாளியை பிடிக்க உதவக்கூடிய தகவல்களை பொதுமக்கள் யாரேனும் தெரிந்து இருந்தால் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுவரையிலான தகவலின் அடிப்படையில், குற்றவாளி சற்று வெளிறிய சருமம் கொண்ட கறுப்பினத்தவர் எனவும், தலைமுடியை மிகவும் குறுகிய அளவில் வெட்டியவர் என்றும் பொலிஸார் அடையாளப்படுத்தி உள்ளனர்.